மூக்குபொடி சித்தரிடம் ஆசி பெற்ற டிடிவி தினகரன்

Report Print Raju Raju in இந்தியா
195Shares
195Shares
lankasrimarket.com

தமிழ்நாட்டில் வாழும் மூக்கு பொடி சித்தரிடம் டிடிவி தினகரன் ஆசி பெற்றுள்ளார்.

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தார்.

அங்குள்ள மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தின் முதல் தளத்தில் உள்ள வரவேற்புப் பிரிவு முன்பு தரையில் அமர்ந்து இருந்த மூக்குபொடி சித்தரை தினகரன் வணங்கினார்

சுமார் 10 நிமிட தரிசனத்துக்குப் பிறகு தினகரன் அங்கிருந்து கிளம்பி சென்றார். மூக்குபொடி சித்தரின் பக்தர் ஆகாஷ் முத்துகிருஷ்ணன் கூறுகையில், சித்தரின் இயற்பெயர் மொட்டையக் கவுண்டர்.

மூக்குபொடி-யை விரும்பி பயன்படுத்துவதால் ‘மூக்குபொடி’ சித்தர் என்று அழைக்கப்படுகிறார்.

சித்தருக்கு 85 வயது இருக்கும், திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டுகளாக வாழும் இவர் பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருப்பார், திடீரென சாப்பிடத் தொடங்குவார் என கூறியுள்ளார்.

வரப்போகும் பிரச்சனைகளை சித்தர் மறைபொருள் மூலமாக சுட்டி காட்டுவார், தானே புயல் வருவதற்கு முதல் நாள் மதியம் கடலைப் பார்த்து அமைதியாக இரு, சத்தம் போடாதே என கூறினார், அடுத்த நாளே புயல் வந்தது.

பணம் மதிப்பு நீக்கம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.500, ரூ.1000 தாள்களை கிழித்துப்போட்டார் என முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்நிலையில் தன்னிடம் ஆசிபெற்ற டிடிவி தினகரனிடம், இனி உனக்கு நல்லகாலம் தான், வெற்றியுடன் திரும்பி வா என சித்தர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்