கோரக்பூர் துயரம்: 63 குழந்தைகள் இறப்பின் பின்னணி என்ன?

Report Print Arbin Arbin in இந்தியா
185Shares
185Shares
lankasrimarket.com

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள் அரசு மருத்துவனையில் 63 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த பிஞ்சுக் குழந்தைகள் இறப்புக்குக் காரணம் மருத்துவமனையில் சிகிச்சைக்குத் தேவையான திரவ ஆக்சிஜன் இல்லாததே என்று தெரியவந்துள்ளது.

பல ஊடங்களில் இந்தச் சம்பவம் கடந்த இரண்டு நாட்களில் நடந்ததாக செய்தி வெளியாகும் நிலையில் கடந்த 5 நாட்களாகவே குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்திருப்பதை குறிப்பிட்ட செய்தி நிறுவனம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

இதனிடையே, சிகிச்சைக்கான திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய ரூ.67 லட்சம் தொகை பாக்கி இருப்பதால், அந்நிறுவனம் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்திவிட்டது என்று தெரியவந்திருக்கிறது. இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இறந்த குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் மூளை அழற்சி நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மருத்துவர்கள் ஒழுங்காக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் இலவச மருத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பினும் மருந்துகள் கூட சரியாக கொடுக்கப்படவில்லை என்றும் இறந்த குழந்தைகளின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குழந்தைகள் இறந்த அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் உறவினருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

“இந்தத் துயரச் சம்பவம் பாஜக அரசின் நிர்வாக குறைபாட்டினால் நிகழ்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் உத்தரப் பிரதேச அரசிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் குழந்தைகள் நல ஆர்வலருமான கைலாஷ் சத்தியார்த்தி, “30 குழந்தைகள் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் இறந்துள்ளனர்.

இது வெறும் துயரச் சம்பவம் மட்டுல்ல. படுகொலை. எதிர்காலத்திலாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய உரிய முறையில் இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்