இளவயது பெண்ணுடன் திருமணம்! கள்ளக்காதலியை கொல்ல முயன்ற நபர் கைது

Report Print Fathima Fathima in இந்தியா
319Shares
319Shares
lankasrimarket.com

தமிழகத்தில் கல்லூரிப் பெண்ணை திருமணம் செய்ய தடையாக இருந்த கள்ளக்காதலியை நபர் ஒருவர் அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கலின் கொல்லிமலையில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்து கல்லால் அடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த பெண் உயிருக்கு போராடிய நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வாழவந்திநாடு பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்கள்,

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் குமார், இவருக்கும் ஜனனி என்ற பெண்ணுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு நவீன் என்ற மகன் உள்ளார், ஜனனி டால்மியோபோர்டு பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இதே பகுதியில் உள்ள மற்றொரு கடையில் முத்துக்குமார் என்பவர் வேலை செய்கிறார், இருவருக்கும் பழக்கம் ஏற்பட நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதுகுறித்து ஜனனியின் கணவர் குமாருக்கு தெரியவர, அவருடன் சண்டை போட்ட ஜனனி முத்துக்குமாருடன் கடந்த ஆறு மாதங்களாக தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் முத்துக்குமாருக்கு தர்ஷினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இவரை திருமணம் செய்ய முடிவெடுத்ததால் ஜனனி எதிர்த்துள்ளார்.

இதனால் அவரை கொல்லிமலைக்கு அழைத்து சென்ற முத்துக்குமார், கழுத்தை நெரித்து சரமாரியாக தாக்கிய பின்னர் தப்பி ஓடியுள்ளார், அருகிலிருந்தவர்கள் ஜனனியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனடிப்படையில் முத்துக்குமாரை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்