கமல்ஹாசனின் புதிய வைரல் டுவீட்

Report Print Raju Raju in இந்தியா
428Shares
428Shares
lankasrimarket.com

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், மாணவ அமைப்புகளும் பலவிதமான கோரிக்கைப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

தொடர்ந்து அரசியல் கருத்துக்களை டுவிட்டரில் கூறி வரும் நடிகர் கமல்ஹாசன் நீட் தேர்வு குறித்தும் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்