தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்தவரை திருமணம் செய்ய மறுத்த மாணவிக்கு ஏற்பட்ட நிலை

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழகத்தில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதால் திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு வாலிபர் வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார்.

இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவிக்க, உடனடியாக அந்த வாலிபர் எனக்கு கிடைக்காத நீ உயிருடன் இருக்க கூடாது என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

சம்பவத்தை அறிந்த பொலிசார் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன் பின் மாணவி அளித்த புகாரின் படி, பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன்(37) என்பவர்தான் மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார் என்பது தெரியவந்ததால், பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில், சென்னை துரைப்பாக்கம் அருகே வசிப்பவர் சுமதி(40) என்பவருக்கு இந்துமதி(20) என்ற மகள் உள்ளார்.

இந்துமதி அங்குள்ள கல்லூரியில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமதி இந்துமதியுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு சுமதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரின் கள்ளத்தொடர்பும் இந்துமதிக்கு தெரியவந்தது. இதனால் தாய் சுமதியிடம் பல முறை கூறியும் சத்திய நாராயணனுடன் உள்ள கள்ளத்தொடர்பை அவர் விடவில்லை.

திருமணம் ஆகாத சத்தியநாராயணன் இரவு நேரத்தில் சுமதி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது தூங்கி கொண்டிருக்கும் இந்துமதியிடம் பல முறை தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

முதலில் சுமதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது சுமதியிடம் மகள் இந்துமதியை எனக்கு திருமணம் செய்து கொடுத்துவிடு.

பின்னர் நாம் மூன்று பேரும் ஒரே வீட்டில் வசிக்கலாம் என்று கூறியதால் சுமதியும் சம்மதித்துள்ளார். திருமணம் குறித்து இந்துமதியிடம் சுமதி கேட்டபோது நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஆனால் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருக்கும் ஒருவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சிபாரிசு செய்தவர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு இந்துமதி சென்றுள்ளார். திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த சுமதியிடம் சத்யநாரயணன் திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளான். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தால், கத்தியை வைத்து குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்