சசிகலா குறித்து வெளியான 2 வது அதிர்ச்சி வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் சிறையின் விதிமுறைகளை மீறி வலம் வரும் புதிய வீடியோவை சிறைத்துறை முன்னாள் டிஜஜி ரூபா லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

ரூபா ஒப்படைத்துள்ள புதிய வீடியோ ஆதாரத்தில், சசிகலாவும், இளவரசியும் தங்களின் சொந்த உடையில் பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான நுழைவாயில் வழியாக சிறைக்குள் வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

கையில் ஷாப்பிங் பையுடன், சுடிதார் அணிந்து சசிகலா வரும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும் பெண்கள் சிறைக்குள் ஆண் காவலர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் பிரதான நுழைவாயிலிலேயே காவலுக்கு நிறுத்தப்படுவார்கள்.

இந்த வீடியோவில் சசிகலா கடந்து செல்லும் பொழுது, ஆண் கைதி ஒருவர் சிறை உடையில் இருப்பதும் பதிவாகி உள்ளது.

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதற்கான ஆதாரம் என கூறி ரூபா, இந்த வீடியோவை அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த புதிய ஆதாரத்தை ரூபா அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்