முத்தலாக் விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

இந்தியாவில் இஸ்லாமியர்கள் விவாகரத்து வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் தனது மனைவிக்கு உடனுக்குடன் விவாகரத்து வழங்கும் வழக்கம் இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால், இந்நடைமுறையால் இஸ்லாமிய பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதால் இதனை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது ‘முத்தலாக் விவகாரத்தில் மனைவிக்கு உடனுக்குடன் விவாகரத்து வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வரும் வரையில் 6 மாதங்களுக்கு இந்நடைமுறையை தற்காலிகமாக தடை செய்யவதாக நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்