கேரளாவில் வைரலாகும் கன்னியாஸ்திரிகளின் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

கேரளாவைச் சேர்ந்த கிறித்தவ மத கன்னியாஸ்திரிகள் சிலர் அத்தப் பூ கோலத்தை சுற்றி திருவாதிரக்களி நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஓணம் திருவிழாவை கேரள மக்கள் கொண்டாடுகின்றனர்.

10 நாட்களும் வண்ணமயமான இந்த கொண்டாட்டத்தை அழகுபடுத்துவது அத்தப்பூக் கோலம். 10வது நாளில் ஓணம் சதயா கொடுத்து அத்தப் பூக் கோலத்தை சுற்றி நடனமாடி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

இந்த கொண்டாட்டத்தில் கிறித்தவ கன்னியாஸ்திரிகள் கலந்துகொண்டு நடனமாடியுள்ளது, அனைவரும் ஒற்றுமையாக, செழிப்போடு இருக்கிறோம் என்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.

45 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில் 10 பெண்கள் வெள்ளை உடையில் தலையில் கறுப்பு ஸ்கார்ப் அணிந்து அத்தப் பூக் கோலத்தை சுற்றி வந்து நடனமாடுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்