பாலியல் தொல்லை தந்தவர்களை நடுரோட்டில் செருப்பால் அடித்த பெண்... வைரல் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

பெண் ஒருவரை காரில் கடத்த முயன்ற இரண்டு ஆண்களை அவர் செருப்பால் அடித்து பாடம் புகட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில் ஒரு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.

இங்கு தனது பிள்ளையை தினமும் ஸ்கூட்டரில் அழைத்து வந்து விடுவதை இளம் தாய் ஒருவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் பள்ளிக்கூடத்துக்கு வரும் போது அங்கு வாசலில் காருடன் நிற்கும் இரண்டு இளைஞர்கள் அப்பெண்ணை தினமும் கிண்டல் செய்வதோடு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று குறித்த பெண் பள்ளிக்கூடத்துக்கு வந்த போது இரண்டு இளைஞர்களும் அவர் கையை பிடித்து இழுத்து காரில் கடத்த முயன்றுள்ளனர்.

இதையடுத்து அப்பெண் கூச்சல் போட அருகிலிருந்த மக்கள் அங்கு கூடிவிட்டனர். அப்போது கோபமடைந்த பெண் இரண்டு இளைஞர்களையும் செருப்பால் அடித்ததோடு, மாட்டு சாணியையும் இருவர் முகத்திலும் பூசினார்.

இதையடுத்து இருவரும் பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்