ஆசிரியைக்கு ஆபாச செய்தி அனுப்பிய மாணவன்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

மும்பையில் தனது ஆசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய 8 ஆம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பன்ச்கானி பகுதியில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த சித்ரா கடந்த ஆண்டு வேலையில் இருந்து நின்றுவிட்டார்.

இந்நிலையில், இவரது 8 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பேஸ்புக் வாயிலாக சித்ராவிடம் தொடர்பு கொண்டுள்ளான்.

தனது மாணவன் தானே என நினைத்து ஆசிரியையும் அந்த மாணவனிடம் பேசியுள்ளார். ஆனால் அந்த மாணவனோ, ஆசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளான், இதனால் கோபமடைந்த ஆசிரியை மாணவனை கண்டித்தும் அவன் கேட்கவில்லை.

இது குறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, இந்த புகாரின்பேரில் பொலிசார் 8–ம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்