புளூவேல் விளையாட்டிலிருந்து மீட்கப்பட்ட இளைஞர்: பொலிசில் அளித்த திடுக்கிடும் தகவல்

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

தமிழகத்தில் புளூவேல் விளையாடிய காரைக்காலை சேர்ந்த இளைஞரை அவரது சகோதரதன் உதவியுடன் பொலிசார் மீட்டுள்ளனர்.

23 வயதான அலெக்ஸ்சாண்டர் என்ற இளைஞரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். அலெக்ஸ்சாண்டர் கையில் கத்தியால் மீன் படத்தை வரைய தயாராகிக் கொண்டிருந்தை பார்த்த அவரின் சகோதரர் அளித்த தகவலின் மூலம் பொலிசார் அலெக்ஸ்சாண்டரை மீட்டுள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் அலெக்ஸ்சாண்டர் கூறியதாவது, நமக்கு சமூக வலைதளங்களில் வரும் லிங்க் மூலமே இந்த விளையாட்டை விளையாட முடியும்.

ஒரு முறை ரஷ்யாவில் எனக்கு போன் செய்த அட்மின், திகிலூட்டும் சினிமாவைப் பார்த்து செல்பி எடுத்து அனுப்புமாறு டாஸ்க் கொடுத்தார்.

பயத்தைப் போக்குவதே இந்த விளையாட்டின் நோக்கம் என்றாலும் மனதளவில் பாதிக்கப்பட்டேன், இது எனக்கு மிக மோசமான மன அழுத்தத்தை தந்தது.

இந்த விளையாட்டால் நான் குடும்பத்தாரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டேன், விளையாட்டிலிருந்து வெளியே வர விரும்பினேன், ஆனால் என்னால் முடியவில்லை.

இனி இதுபோன்ற விளையாட்டில் ஈடுபட மாட்டேன், யாரும் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்