தூக்கிட்டு தற்கொலை செய்த இளம்பெண்: உடலில் எழுதி வைத்திருந்த ரகசியம்

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சென்னையில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தேவிக்கும், மணலி அண்ணா தெரு பகுதியை சேர்ந்த டார்வின் ராஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றள்ளது.

advertisement

சிறிது நாட்களிலேயே டார்வின் ராஜாவின் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு, தேவியை கொடுமைப்படுத்த தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனியார் நிறுவனத்தின் பணிபுரியும் டார்வின் ராஜா, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாகவும், இதுதொடர்பாக கணவன் மனைவி இடையே சம்பவத்தன்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த தேவி, தனது அறைக்குச் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீருடன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பிரேத பரிசோதனை போது, கடிதம் வைக்கப்பட்டுள்ள இடத்தை தனது உடலில் தேவி எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேவி அறையில் இருந்து 9 பக்க கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதில் கணவனை கைது செய்து தண்டனை வாங்கி தர வேண்டும் என்று நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தேவி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தேவியின் உறவினர்கள் அளித்த புகாரை தொடர்ந்து மணலி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்