வெளியான வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஓணம் பண்டிகை அன்று மாட்டுக்கறி சாப்பிட்ட பிரபல மலையாள நடிகையின் வீடியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஒன்று, Surabhi’s day out என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

ஒளிபரப்பட்ட அந்த நிகழ்ச்சியில், கோழிக்கோட்டில் உள்ள மலபார் உணவகம் ஒன்றிற்கு செல்லும் சுரபி, பரோட்டாவுடன் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்.

ஓணம் பண்டிகை அன்று பல்வேறு வகையான சைவ உணகளை சமைத்து உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுவார்கள்.

அன்றைய நாளில் எதற்காக அசைவ உணவினை சாப்பிட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், Kerala Youth Commission கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

சுரப்பிக்கு எதிராக கூறப்பட்டுள்ள கருத்துக்கள்

உங்கள் பெயருக்கும், நீங்கள் செய்துள்ள செயலுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

மறக்காமல் அடுத்த வரும் பக்ரித் பண்டிகை அன்று பன்றிக்கறி சாப்பிடுங்கள்.

நீங்கள் பணத்திற்காக எந்த மாதிரியான செயல்களையும் செய்வீர்கள், ஆனால் அதனை எதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறீர்கள்.

ஓணம் பண்டிகை அன்று மாட்டுக்கறி சாப்பிட்டுள்ளது, உங்களது இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகும்.

இப்படி இவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில், நடிகை சுரபி அளித்துள்ள விளக்கம், தொலைக்காட்சியில் இருந்து இப்படி ஒரு நிகழ்ச்சிக்காக என்னை அனுகினார்கள், நான் எப்போதும் கோழிக்கோட்டில் உள்ள மலபார் உணவகத்திற்கு அடிக்கடி சென்று பரோட்டா மற்றும் மாட்டுக்கறி சாப்பிடுவேன்.

அதனை தான் அந்த நிகழ்ச்சியின் போது சூட் செய்தார்கள். நான் மாட்டுக்கறி சாப்பிட்டது தவறு கிடையாது, அதனை ஓணம் பண்டிகை அன்று ஒளிபரப்பு செய்தது தான் தவறு என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்