வைரலாகும் நடிகர் ரஜினிகாந்தின் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

நதிகள் மீட்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ்நாட்டின் கோவையில் உள்ள ஈஷா மையம் அமைப்பு சார்பில் நதிகளை மீட்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3ஆம் திகதி தொடங்கிய பிரசாரம் அக்டோபர் 2ஆம் திகதி வரை நடக்கிறது.

இதன் ஒரு பகுதியான பிரச்சார கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நதி நீர் இணைப்புக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ அப்போது வெளியிடப்பட்டது.

அதில், ரத்த நாளங்கள் இல்லையென்றால் உடம்பு இயங்காது. பூமியின் ரத்த நாளங்களான நதிகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளைகளையும் ஜீவ நதியாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்