கணவருக்கு இறுதிச்சடங்கு செய்த மனைவி: கோவில் சென்ற போது நடந்த அதிசயம்

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

கேரளாவின் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேஸ்வரி(54) - கிருஷ்ணன் குட்டி(58).

இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு சண்டை ஏற்பட, கிருஷ்ணன் உடனடியாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன் பின் இவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கோவையைச் சேர்ந்த பொலிசார், கேரளாவில் இருக்கும் ராஜேஸ்வரியிடம் சென்று, சாலை விபத்தில் கிருஷ்ணன் சந்திரன் என்பவர் உயிருக்கு போராடி வருகிறார், அவர் காணமல் போன உங்கள் கணவராக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அவர் தொடர்பான புகைப்படத்தையும் காட்டியுள்ளனர். புகைப்படத்தைக் கண்ட ராஜேஸ்வரி இது தன்னுடைய கணவர் கிடையாது என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிருஷ்ணன் சந்திரன் இறந்ததால், பொலிசார் மீண்டும் ராஜேஸ்வரியிடம் இதனை தெரிவித்துள்ளனர்.

அப்போது அவர் தனது கணவர் கையில் ஒரு வெட்டுத்தழும்பு, முதுகில் ஒரு பெரிய மச்சம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

மருத்துவர்கள் பரிசோதித்த போது அதே போன்று கிருஷ்ணன் சந்திரனின் உடலில் தழும்பு மற்றும் மச்சம் இருந்துள்ளது.

சொன்ன அடையாளங்கள் இருந்ததால், தனது கணவர் தான் இறந்துவிட்டார் என்று கூறி அவருக்கு இறுதிச் சடங்குகள் எல்லாம் செய்து முடித்தார் ராஜேஸ்வரி.

கணவர் இறந்த துக்கத்தில் இருந்த ராஜேஸ்வரியை ஆறுதல் படுத்த வேண்டும் என்பதற்காக அவரது உறவினர்கள், அவரை பழனி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சாமி கும்பிட்டு விட்டு, திரும்புகையில் இறந்து போனதாக கருதப்பட்ட ராஜேஸ்வரியின் கணவர் அவரது கண் முன்னால் நடந்து சென்றுள்ளார்.

இதைக் கண்ட ராஜேஸ்வரி உடனடியாக ஓடி சென்று தனது கணவரை ஆரத்தழுவினார். இதையடுத்து இருவரும் ஒன்றாக ஊருக்கு சென்றனர்.

மேலும் புதைக்கப்பட்ட நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்