ஆடைகளை அகற்றி சோதனை செய்தனர்: குமுறும் திருநங்கை

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

நீட் தேர்வுக்கு எதிராகவும் அதற்குக் காரணமான மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது ஆடைகளை களைந்து நிர்வாணமாக சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

advertisement

இதுகுறித்து கிரேஸ் என்ற திருநங்கை கூறியதாவது, எங்களைக் கைது செய்த அன்று, ஒருநாள் முழுவதும் அலைக்கழிக்க வைத்துவிட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்டோம். சிறைக்குள் நுழைவதற்கு முன்பு சிறையில் இருந்த பெண் காவலர்கள், என்னையும் உடன் வந்த தோழியிடமும், 'ஆடை இல்லாமல் சோதனை செய்ய வேண்டும்' என்றனர், 'எதற்காக இப்படியொரு சோதனை?' என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், 'உங்களைப் பெண்கள் சிறையில் அடைக்க வேண்டுமென்றால் நீங்கள் உண்மையில் பெண்ணாக மாறும் அறுவைசிகிச்சை செய்துகொண்டீர்களா என்பதை சோதிக்க வேண்டும்' என்றனர். 'இவ்வாறு சோதனை நடத்த எந்தச் சட்டத்தில் இடம் உள்ளது என்று தெரியவில்லை.

இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் பெண்ணாக மாறியதற்கான சான்றிதழைக் கொண்டு வந்திருப்போம்' என எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தோம்.

அதையும் மீறி, இரண்டு பெண் காவலர்கள் எங்கள் ஆடைகளை அகற்றி சோதனை செய்தனர். சோதனை என்னும் பெயரில் சிறையில் நடந்த இந்தக் கசப்பான நிகழ்வு, என் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டது.

சோதனை நடத்திய பிறகு, அந்தப் பெண் காவலர் என்னை ஏளனத்துடன் பார்த்து சிரித்தார். அது என்னுடைய வேதனையை அதிகப்படுத்திவிட்டது. ''எங்க ஆப்ரேஷன் பண்ணின?” என சிரித்தபடியே கேட்டார்.

சோதனைக்குப் பிறகு எங்களை பெண்கள் சிறையில் அடைக்காமல், தொற்று நோயாளிகள் அடைபட்டிருக்கும் கொட்டடியில் அடைத்தார்கள். மக்களுக்காகப் போராடிய எங்களைத் திருநங்கைகளா என நிர்வாண சோதனை நடத்தி அவமானப்படுத்திவிட்டது இந்த அரசு என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்