எடப்பாடி பழனிசாமி நீக்கம்: டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

அதிமுக தலைமை நிலைய செயலர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாக அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அம்மா கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி விடுவிக்கப்படுவதாகவும், அந்த பொறுப்பில் பழனியப்பனை நியமித்துள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மேலும், பொருளாளர் பொறுப்பிலிருந்து திண்டுக்கல் சீனிவாசன் விடுவிக்கப்பட்டு அப்பொறுப்பில் ரெங்கசாமியை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்