80 வயது தாயை தோளில் சுமந்து சென்ற மகன்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

சேலம் மாவட்டத்தில்உள்ள மருத்துவமனை ஒன்றில் போதிய படுக்கை வசதி, சக்கர நாற்காலி கூட இல்லாததால் 80 வயது மூதாட்டியை அவரது மகன் தோளில் சுமந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

சேலம் மாவட்டத்தில்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், நோயாளிகளுக்கு போதிக வசதிகளை செய்து கொடுப்பதில் மருத்துவமனைகள் தடுமாறி வருகின்றன.

அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 80 படுக்கை வசதி மட்டுமே கொண்ட மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 560க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதித்து அனுமதிக்கப்பட்டிருப்பதால் படுக்கை வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 80 வயது மாரியாயி என்பவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை முறையாக அளிக்கப்படாத காரணத்தால், மாரியாயியை அவரது மகன் தோளில் சுமந்து கொண்டுவேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனையில் ஒரு சற்கர நாற்காலி கூட நிலையில் அவரே தோளில் சுமந்து சென்று, ஆட்டோவின் உதவியுடன் வேறு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்