பொலிசை சரமாரியாக தாக்கிய பெண் நீதிபதி: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

உத்திரகாண்ட் மாநிலத்தில் பெண் நீதிபதி ஒருவர் காவல் நிலையத்தில் பொலிசை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

டேராடூனில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் பயின்று வந்த மாணவர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

advertisement

அப்போது மாணவர்களை எச்சரித்த பொலிசார், உங்கள் பெற்றோர்களை அழைத்து வாருங்கள் என தெரிவித்துள்ளனர்.

அதன்படியே, மாணவனின் தாய் ஒருவர் காவல் நிலையம் சென்றுள்ளார். அவர் தன்னை கூடுதல் நீதிபதி என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அப்போது அங்கிருந்த நரேஷ் ரத்தோர் என்ற பொலிஸ், அப்பெண்ணை தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். ஆத்திரமடைந்த அப்பெண், அந்த பொலிசை சரமாரியாக அரைந்துள்ளார்.

இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. அப்பெண் நீதிபதி என்பது உண்மையாகும் பட்சத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றத்தில் அனுமதி கேட்க உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்