மக்கள் வாழத் தகுதியற்ற இடம் தனுஷ்கோடி: தமிழக அரசு

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியை மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பழைய தனுஷ்கோடி, தாவுக்காடு, பாரடி உள்ளிட்ட கிராமங்களிலும் அங்குள்ள பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி ராமேஸ்வரம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

advertisement

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராகிய அதிகாரிகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க தனுஷ் கோடி தற்போது வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் தொழில் நிமித்தமாக மட்டுமே தற்காலிகமாக தங்கியுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

மேலும் அங்கு பழைய தபால் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்டவை நினைவு சின்னமாக மட்டுமே உள்ளன என்றும் கடல்சீற்ற காலங்களில் இங்கு வசிப்பது ஆபத்தானது என்றும் இதனால் அந்த பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் உள்ளோம் எனவும் விளக்கமளித்தனர்.

இதனை கேட்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு வருகிற 17ம் திகதி தனுஷ்கோடியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.

அதன்பின் இந்த மனு மீது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி மனு மீதான விசாரணையை 18-ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழகத்தின் தெற்குக் கரையோரங்கள், டிசம்பர் மாதம் 1964ல் அடித்தப் புயலில் ஆட்டம் கண்டுபோனது. அதிலும் குறிப்பாக தனுஷ்கோடி நகரமும் அதன் சுற்றுப்புறக் கடற்கரையும் பெருங்கோவ புயலுக்கு இரையாகின.

தென்னகத்து துறைமுக நகரங்களில் புயலுக்கு முந்தையத் தனுஷ்கோடிக்கு தனி இடமுண்டு. வணிக ரீதியில் முக்கிய நகரமான தனுஷ்கோடி 1964 புயலுக்கு முன்பு ஐந்நூறு குடும்பங்களுக்கு மேல் வசித்தக் குடியிருப்புப் பகுதியாகவும் இருந்தது.

பழைய ரயில் நிலையம், சிதைந்துப் போன தேவாலயம், பள்ளிக்கூடம், வீடுகள் என நகரின் பாதிக்குமேல் கடல் விழுங்கி விட, எஞ்சியிருக்கும் 'கட்டடக் கூடுகள்' உடன் தொலைந்த நகரமாகவே இன்று காட்சியளிக்கிறது தனுஷ்கோடி.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்