2 1/2 மணிநேரம் இலையில் கட்டி தொங்கவிடப்பட்ட 3 வயது குழந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 3 வயது குழந்தையை சுமார் இரண்டரை மணிநேரம் இலையில் கட்டிவைத்துள்ள புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாதவர்களின் பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது, இந்த பண்டிகை அன்று தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் போன்று அலங்காரம் செய்வார்கள், மேலும் பல்வேறு வகையான பலகாரங்களை செய்து தங்கள் வீட்டிற்கு கிருஷ்ணரை வரவேற்பார்கள்.

advertisement

இந்நிலையில் கேரளாவின் கண்ணுர் பகுதியில், 3 வயது குழந்தையை கிருஷ்ணர் போன்று அலங்காரம் செய்து செயற்கையான அரசமர இலையில் கட்டி வைத்துள்ளனர்.

ஒரு வாகனத்தின் உதவியுடன் அரச இலையை கட்டி, அதில் இந்த சிறுவனை கட்டிவைத்துள்ளனர், சுமார் இரண்டரை மணிநேரம் இந்த குழந்தை இலையில் தொங்கியபடி இருந்துள்ளது.

இந்த காட்சியை Seva Samithi என்ற பெண்மணி புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, முதலில் இதனை நான் சிலை என்று நினைத்தேன், ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த குழந்தையின் கால்கள் லேசாக அசைந்தன, அதன்பின்னர் தான் தெரியவந்தது அது உண்மையான குழந்தை என்று.

நான் இதுகுறித்து அருகில் இருப்பவர்களிடம் விசாரித்தேன், ஆனால் யாரும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படத்திற்கு எதிராக பலரும் எதிர்கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கண்ணுர் பொலிசார் கூறியதாவது, இந்த சம்பவம் தொடர்பாக எவ்வித புகாரும் எங்களுக்கு வரவில்லை, அப்படி வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்