பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஹாசினி! குற்றவாளி விடுவிப்பு- பெற்றோரின் கண்ணீர் பேட்டி

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

என் மகனை வெளியே கொண்டு வருவேன் என குற்றவாளியின் தந்தை தன்னிடம் சாவல் விட்டதாக ஹாசினியின் தந்தை கூறியுள்ளார்.

சென்னை முகலிவாக்கத்தில் 7 வயது சிறுமியான ஹாசினி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

advertisement

இந்த வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என தெரியவந்தது, கடந்த ஆறு மாதங்களாக சிறையில் அடைப்பட்டுள்ள தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து தஷ்வந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹாசினியின் தந்தை, உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது, வேதனையளிக்கிறது.

என் மகனை வெளியே கொண்டு வருவேன் என தஷ்வந்தின் தந்தை சவால்விட்டார்.

நீதித்துறையை தான் நம்பி இருந்தோம், இதுபோன்ற தீர்ப்புகளால் நீதிமன்றத்தின் மேல் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.

என் குழந்தையை போன்று மற்ற குழந்தைகளையும் தஷ்வந்த் கொல்ல வாய்ப்பிருக்கிறது,

அவன் உயிர் வாழவே கூடாது, அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்