கணவரை கொலை செய்து சடலத்தை வீட்டில் மறைத்து வைத்த மனைவி

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

குடித்து விட்டு தன்னையும் தனது பிள்ளைகளையும் தினமும் கொடுமைப்படுத்திய கணவரை மகள் உதவியுடன் கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ். இவர் மனைவி காஜல். இவர்களுக்கு அனுப் என்ற மகனும், குஷி, சித்தி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

மதுவுக்கு அடிமையான முகேஷ் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் மனைவி நடத்தி வரும் அழகுநிலையத்துக்கு சென்ற முகேஷ் காஜல் வாடிக்கையாளர்கள் முன்னால் அவரை அசிங்கபடுத்தியுள்ளார்.

முகேஷின் தொல்லை அதிகமாக தொடங்க அவரை கொலை செய்ய காஜல் முடிவெடுத்தார்.

இருதினங்களுக்கு முன்னர் குடி போதையில் வீட்டுக்கு வந்த முகேஷை தனது மகளுடன் சேர்ந்து காஜல் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை வெளியில் சென்று புதைக்க நினைத்த போது அவர்கள் வீட்டு பகுதியில் பூஜை நடந்ததால் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளது.

இதையடுத்து சடலத்தை இரவு முழுவதும் வீட்டிலேயே வைத்துள்ளார். இதை எப்படியோ பார்த்து விட்ட வினோத் என்ற நபர் இது குறித்து பொலிசுக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு பொலிஸ் வந்து விசாரித்த போது தனக்கு எதுவும் தெரியாது என முதலில் மறுத்த காஜல் பின்னர் கணவரை கொன்றதை ஒப்பு கொண்டுள்ளார்.

இதையடுத்து காஜலை கைது செய்த பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்