சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கேரள பாதிரியார் கைது

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

பத்து வயது சிறுமியை தேவாலயத்தில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த பாதிரியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த ஒரு வருடமாக தேவராஜ் (65) என்பவர் பாதிரியாராக உள்ளார்.

இருதினங்களுக்கு முன்னர் தேவாலயத்தில் நடைப்பெற்ற பைபிள் வகுப்பில் கலந்து கொள்ள பத்து வயது சிறுமி சென்றுள்ளார்.

அப்போது சிறுமியிடம் பாலியலில் துன்புறுத்தலில் தேவராஜ் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தந்தை இது குறித்து உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் தேவராஜை கைது செய்துள்ள நிலையில் இரண்டு பிரிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இன்று மாலை நீதிமன்றத்தில் தேவராஜ் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்