ஐபோனுக்கு பதிலாக சோப்பை வாடிக்கையாளருக்கு தந்த டெலிவரி பாய்: சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஐபோன் 8 மொடலுக்கு பதிலாக ஓன்லைன் வாடிக்கையாளர் ஒருவருக்கு மோட்டோ ஜி பெட்டியில் சோப்பை வைத்து கொடுத்த டெலிவரி பாய் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் சண்டிகர் நகரில் வசித்து வருபவர் Ankush Wadhwa. இவர் ஓன்லைனில் ஐபோன் 8 மொடல் செல்போனை ஆர்டர் செய்துள்ளார்.

இதற்கான பணத்தை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் Ankush வீட்டுக்கு பார்சல் ஒன்றை டெலிவரி பாய் இளைஞர் கொண்டு சென்றுள்ளார்.

Ankush ஐபோன் ஆர்டர் செய்திருந்த நிலையில், மோட்டோ ஜி அட்டை பெட்டி பார்சலில் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது உள்ளே சோப்பு துண்டுகள் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து தப்பியோட முயன்ற டெலிவரி பாய் இளைஞரை பிடித்து Ankush பொலிசில் ஒப்படைத்தார்.

பொலிஸ் விசாரணையில் இளைஞரின் பெயர் சுனில்குமார் (23) என்பதும் வேண்டுமென்றே பார்சலை பிரித்து அதிலிருந்த ஐபோனை எடுத்து கொண்டு சோப்பு துண்டை வைத்ததும் தெரியவந்துள்ளது.

சுனில்குமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி இரண்டு நாள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்