வாகன ஓட்டி குடும்பத்துக்கு கையெடுத்து கும்பிடு போட்ட பொலிஸ்: வைரலாகும் புகைப்படம்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய மாநிலம் ஆந்திராவில் பலமுறை விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டியை பார்த்த பொலிஸ் காவலர் ஒருவர் அவருக்கு கும்பிடு போடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

ஐதராபாத் அருகில் உள்ள ஆனந்த்பூர் மாவட்டத்தில் மடகாசிரா பகுதியில் சுகுப் குமார் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று காவல் நிலையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹனுமந்த்ரையா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் 6 பேருடன் குடும்பத்துடன் சென்றுள்ளார்.

ஹனுமந்த்ரையா இப்படி பயணிப்பது வாடிக்கையாகும். அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி காவல் ஆய்வாளர் சுகுப் குமார் அபராதம் விதித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் மனைவி, 2 மகன், தாய் என பைக்கில் ஹனுமந்த்ரையா வருவதை கவனித்த காவல் ஆய்வாளர் மனம் நொந்து அவரை பார்த்து இரண்டு கைகளையும் கூப்பி கும்பிடு போட்டார்.

மீண்டும் மீண்டும் இது போன்று பயணிப்பது சாலை விதிமீறல் ஆகும் என வலியுறுத்தினார். காவல் ஆய்வாளர் இவ்வாறு கூறியது ஹனுமந்த்ரையாவுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

மேலும் இரு கை கூப்பி கும்பிடு போட்டதும் அவர் திகைத்து போய் சிரித்தார் என காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

காவல் ஆய்வாளர் ஒருவர் வாகன ஓட்டியிடம் கும்பிடு போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்