இளம்பெண்ணுக்கு பேஸ்புக்கில் பாலியல் அச்சுறுத்தல் விடுத்த நபர்: கொந்தளித்த பொதுமக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் அறிமுகம் இல்லாத இளம்பெண்ணுக்கு பேஸ்புக்கில் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண் தமது 14 வயதான சகோதரை Tag செய்து ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்திற்கு அக்னிஸ்வர் சக்ரவர்த்தி என்ற இளைஞர், ஸ்மைலியை கமெண்ட் பாக்சில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய பேஸ்புக்கில் அறிமுகம் இல்லாத ஒருவர் கமெண்ட் செய்திருந்ததால் அதனை அந்த இளம்பெண் நீக்கிவிட்டார்.

இந்த நிலையில் தனது கமெண்ட்டை நீக்கியதால் ஆத்திரமடைந்த அக்னிஸ்வர் அந்த இளம்பெண்ணையும் அவரது 14 வயது சகோதரரையும் தனது நண்பர்களை வைத்து பாலியல் வன்புணர்வு செய்துவிடுதாக மிரட்டியுள்ளார்.

சமூக வலைதளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் ஒருவர்,

பாலியல் வன்புணர்வு செய்துவிடுவதாக மிரட்டுவதை பெண்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்படி யாராவது மிரட்டினால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அக்னிஸ்வர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கின் கீழ் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், மேலும் 14 வயது சிறுவனையும் பாலியல் வன்புணர் செய்துவிடுவதாக மிரட்டியதால் சிறுவர் பாதுகாப்பு வழக்கின் (POCSO) கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அக்னிஸ்வர் சக்ரவர்த்தி குறித்து அவனுடைய நண்பர்கள் தெரிவிக்கையில், அவன் எப்பொழுதுமே இப்படிதான் என்றும், எல்லா பெண்களிடமும் இது போல தான் பேசுவான் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அக்னிஸ்வர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்