இன்றுடன் முடியும் பரோல்: மீண்டும் சிறைக்கு செல்வாரா சசிகலா?

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
Seylon Bank Promotion

சசிகலாவுக்கு பெங்களூர் சிறை வழங்கிய பரோல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவர் மீண்டும் சிறை செல்வாரா அல்லது பரோல் காலம் நீட்டிக்கப்படுமா என்பது கேள்விகுறியாக உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கணவரை கவனித்து கொள்ள வேண்டும் என சசிகலா, சிறை துறையிடம் பரோல் கேட்டு கோரிக்கை வைத்த நிலையில் அவருக்கு ஐந்து நாட்கள் பரோல் வழங்கப்பட்டது

சசிகலாவின் பரோல் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று அவர் சிறை திரும்புவாரா அல்லது பரோல் காலத்தை நீட்டிக்க கோருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்