நடுவானில் பிரிந்த தமிழரின் உயிர்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

தமிழர் ஒருவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

மூத்தன் முருகன் (52) என்ற இந்த நபர், குவைத்தில் பணிபுரிந்து வந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர், விசாக்காலம் முடிவடைவதையடுத்து தமிழகம் செல்லவிருந்தவர்.

குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான யு.எல்.230 விமானத்தில் பயணத்த இவர், இலங்கை கட்டுநாயக்கவில் தரையிறங்க முன்னரே நடுவானில் வைத்து இவரது உயிரி பிரிந்தது.

விமான நிலைய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட இவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்