ஆபாச நடனமாடிய பெண் சாமியார்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இந்தியாவில் பெண் சாமியார் ஒருவர் தனது ஆதரவாளருடன் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச நடனமாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மும்பையின் போரிவிலி பகுதியைச் சேர்ந்தவர் ராதே மா. பெண் சாமியாரான இவர் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்.

advertisement

இந்நிலையில் இவர் தனது ஆதரவாளர் ஒருவருடன் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வீடியோ காண...

குறித்த விடியோவில் நவ நாகரீக உடை அணிந்து இருக்கும் ராதே மா மெதுவாக நடன அசைவுகளை வெளிப்படுத்துகிறார்.

அப்போது அவரது அருகில் இருக்கும் ஆதரவாளர் ஒருவர் ராதே மாவுடன் நடனம் ஆட விரும்ப, அவருடன் சேர்ந்து ஆடுகிறார்.

அதன் பின் அவர் ராதே மாவை தூக்கி வைத்துக் கொண்டு நடனமாடியது தான் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை சம்பாதித்துள்ளது.

சமீபத்தில் டெல்லி காவல் நிலையம் ஒன்றில் காவல் அதிகாரியின் இருக்கையில் இவர் அமர்ந்திருக்க, அதிகாரி கைகட்டி நின்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்