பெங்களூர் சிறைக்கு புறப்பட்டார் சசிகலா! கடைசியாக பேசிய வார்த்தை

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
Promotion
advertisement

சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிவடைவதால் சென்னையிலிருந்து பெங்களூருக்கு புறப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்ப்பதற்காக ஐந்து நாட்கள் பரோலில் வந்தார் சசிகலா.

advertisement

கடுமையான கட்டுப்பாடுகளுடன் வெளிவந்தவர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தார்.

குடும்ப உறுப்பினர்களை தவிர வேற யாரையும் இவர் சந்திக்கவில்லை, தினகரன் மற்றும் திவாகரனுக்கு இடையேயுள்ள பிரச்சனைகளை பேசித் தீர்க்க முயற்சித்துள்ளார்.

ஆனால் தான் எதிர்பார்த்த முடிவு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தாராம் சசிகலா, இந்நிலையில் சசிகலா வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நம்பிக்கை இருந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் சோகத்தில் உள்ளனர்.

இதற்கிடையே இன்றுடன் பரோல் முடிவடைவதால் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு புறப்பட்டு சென்றார்.

புறப்படும் முன் டிடிவி தினகரனிடம் “அமைதியாக இரு” என கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்