பிறந்த குழந்தையை காப்பாற்றிய 350 ஆம்புலன்ஸ் டிரைவர்கள்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

இந்தியாவில் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் உதவியால் பிறந்த பெண் குழந்தை ஒன்று காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

advertisement

இதனால் அவர் உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தைக்கு நிமோனியா மற்றும் ஜன்னி காய்ச்சல் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை இங்கு அளிக்க முடியாது, திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மட்டுமே இதற்கான சிகிச்சை உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி மருத்துவர்கள் குழந்தையை 7 மணி நேரத்திற்குள் அழைத்துச்சென்றால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் திருவனந்தபுரத்திற்கு 365 கி.மீற்றர் செல்ல வேண்டும், குறைந்தது 10 மணி நேரம் ஆகும் என்பதால் குழந்தையை காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த குழந்தையின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இவர்களின் அழுகுரலைக் கேட்ட அருகில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உடனடியாக மருத்துவமனை உள்ளே வந்துள்ளனர்.

அப்போது அவர்களிடம் நிலைமையை கூறியதால், அவர்கள் உடனடியாக திருவனந்தபுரம் வரை உள்ள 350 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த டிரைவர்கள் அனைவரும் தாங்கள் இருக்கும் காவல்நிலையங்களுக்கு சென்று, இதுகுறித்த விபரத்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதன் பின் பொலிசாரும் ஆம்புலன்ஸ் வரும் இடங்களில் போக்குவரத்தை சரி செய்ததால் 365 கி.மீற்றரை 10 மணி நேரத்தில் கடக்க வேண்டிய ஆம்புலன்ஸ் சுமார் 5 மணி நேரம் 30 நிமிடற்குள் மருத்துவமனைக்கு சென்றது.

இதையடுத்து குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது, தற்போது குழந்தை நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்