மில்லியன் ஒளிகளில் மின்னிய ஜனாதிபதி மாளிகை

Report Print Thayalan Thayalan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

புதுடெல்லியில் அமைந்துள்ள மத்திய அரசின் முக்கிய இடங்கள் அமையப்பெற்ற ‘இரைசினாக் குன்று’ 16 மில்லியன் வண்ணங்கள் உடைய லேசர் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு, நேற்று புதன்கிழமை ஒளிர வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறித்த 16 மில்லியன் விளக்குகளை பொருத்தும் பணிகளை, சுமார் 42 ஆண்டுகள் அரசுக்காக பணியாற்றிய உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த, ‘மணிபால் சிங்’ தலைமையில் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இந்திய அரசின் மிக முதன்மையான அரசுக் கட்டிடங்களைக் கொண்டுள்ள நிலப்பரப்பு “இரைசினாக் குன்று” ஆகும். இங்கு குடியரசுத் தலைவரின் அலுவல்முறை வாழிடம், பிரதமரின் அலுவலகம், நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் முக்கிய அமைச்சகங்கள் இடம்பெற்றுள்ள தலைமைச் செயலக கட்டிடங்கள் அமைந்துள்ளன. இதனைச் சூழ்ந்து முதன்மையானக் கட்டிடங்களும் சாலைகளும் உள்ளன.

இங்குள்ள பாரம்பரிய வடக்கு மற்றும் தெற்கு கட்டிடங்களை லேசர் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று, இந்த கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருந்த லேசர் விளக்குகள் ஒளிரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்