இந்தியாவை உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு வெளியானது

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி ஆருஷி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அவரது பெற்றோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில், கடந்த 2008-ம் ஆண்டு பல் டாக்டர் தம்பதியான ராஜேஷ் – நூபுர் தல்வார் ஆகியோரின் மகள் 14 வயது ஆருஷியும், வேலைக்காரர் ஹேம்ராஜும் (45) படுகொலை செய்யப்பட்டனர்.

advertisement

ஆருஷி, அவரது படுக்கையறையில் பிணமாகக் கிடந்த நிலையில், ஹேம்ராஜ் மொட்டை மாடியிலுள்ள தண்ணீர் டேங் அருகே கழுத்து அறுபட்டு கொலையுண்டு கிடந்தார்.

ஆருஷியும், ஹேம்ராஜூம் படுக்கை அறையில் அலங்கோலமான நிலையில் இருந்ததை ஆருஷியின் பெற்றோர் பார்த்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே இருவரையும் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆருஷி வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், 2013-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய காஸியாபாத் சி.பி.ஐ நீதிமன்றம், ஆருஷியின் பெற்றோரை குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது.

இந்நிலையில், ஆருஷி பெற்றோரின் மேல்முறையீடு வழக்கின் விசாரணை, கடந்த புதன்கிழமை நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தீர்ப்பு இன்று அலகாபாத் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தக் கொலை வழக்கிலிருந்து ஆருஷியின் பெற்றோருக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்