சிறைக்கு செல்லும் முன் சசிகலா செய்த செயல்

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

பெங்களூரு சிறைக்கு செல்லும் முன் சசிகலா ஒரு குழந்தைக்கு ராமச்சந்திரா என்று பெயர் வைத்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நடராஜன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவரை பார்ப்பதற்கு சுமார் 5 நாட்கள் பரோலில் சென்னை வந்தார்.

இன்றுடன் பரோல் முடிவடையவுள்ள நிலையில் பெங்களூருவுக்கு காரிலே சென்றுள்ளார். அப்போது சண்முகானந்தம், அவரது மனைவி பாக்கியப்பிரியா ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் பகுதியில் காத்திருந்தனர்.

இது சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்களை கண்டவுடன் உடனடியாக காரை நிறுத்தி பேசியதுடன் குழந்தைக்கு ராமச்சந்திரா எனப் பெயர் வைத்துள்ளார்.

அவர்கள் சசிகலாவுக்கு காமாட்சியம்மன் படத்தையும், காமாட்சி அம்மன் குங்குமத்தையும் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட சசிகலா புன்னகையோடு சிறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்