பிரபாகரனை பற்றி ராகுல் காந்தி பேசியதன் பின்னணி என்ன?

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவம் வருத்தத்துக்குரியது என்று தெரிவித்தார்.

பிரபாகரன், அவரின் மகன் பாலச்சந்திரன் படுகொலை சம்பவம் குறித்து திடீரென்று ராகுல் காந்தி பேச வேண்டிய அவசியம் ஏன்?" என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

advertisement

குஜராத் மாநிலத் தேர்தல் மட்டுமல்லாது, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கும் காங்கிரஸ் இப்போதே ஆயத்தமாகி வருகிறது என்பதையே ராகுலின் அண்மைக்கால நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

மேலும், பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளும் காங்கிரஸ் கட்சியில் அண்மைக்காலமாக வேகமெடுத்து வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முன்னோட்டமாகவே ராகுல் காந்தி, தன் பேச்சில் பிரியங்காவையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைத் தழுவியது. அதற்குக் காரணம், அண்டை நாடான இலங்கைக்கு, விடுதலைப்புலிகள் அமைப்பை வீழ்த்துவதற்கு மத்திய அரசு உதவியதுதான் முக்கியக் காரணம் என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்