20 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற சீரியல் கில்லர்! தூக்குதண்டனை ரத்தானது

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

இந்தியாவில் 20 பெண்களை பலாத்காரம் செய்து சயனைடு கொடுத்து கொன்ற சீரியல் கில்லர் மோகன் குமாருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவின் மங்களூரை சேர்ந்தவர் மோகன் குமார், அங்குள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

advertisement

கடந்த 2009ம் ஆண்டு அனிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார், திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியான உறவு வைத்துள்ளதுடன், சயனைடு கொடுத்து கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து ஹாசன் பேருந்து நிலையத்தில் பிணமாக அனிதா கண்டெடுக்கப்பட்டார், இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்திய போது தான் 2008ல் ஹேமா என்ற பெண்ணும் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் 2003 முதல் 2009ம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 20 பெண்கள் சயனைடு அருந்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு பெண் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்ட மோகன் குமாரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.

அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அனிதா வழக்கில் 2013ம் ஆண்டு நீதிபதி பி.கே.நாயக் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மோகன் குமார் மேல் முறையீடு செய்தார்.

இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தூக்கு தண்டனையை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

இதற்கிடையே 7 பேர் வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 13 பெண்களின் வழக்குகள் மங்களூரு விரைவு நீதிமன்றத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்