இந்தியாவில் தொடர்ந்து பிச்சையெடுத்து அதன் மூலம் பயணம் செய்வேன் என ரஷ்ய இளைஞர் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் எவ்ஜினி பெர்டிகோவ் என்பவரின் எடிஎம் கார்டு லாக் ஆகிவிட்ட காரணத்தால் தமிழ்நாட்டில் உள்ள கோயிலில் பிச்சையெடுத்துள்ளார்.
இதனைப்பார்த்த காவல்துறையினர் அவரை மீட்டு ரஷ்ய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தனர், ஆனால் அவர் வரவில்லை என ரஷ்ய தூதரகம் தெரிவித்ததையடுத்து, அவரை தேடும் பணியில் சென்னை பொலிசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை திநகரில் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய இவர், எனக்கு ரஷ்ய தூதரகத்தின் உதவி தேவையில்லை, என்னை பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியானதால் அனைவரும் என்னிடம் வந்து பேசுகின்றனர், அவர்களிடம் 100 ரூபாய் மட்டும் கேட்கிறேன்.
எனக்கு பிச்சை எடுப்பது பிடித்திருக்கிறது, தொடர்ந்து பிச்சையெடுப்பேன். தற்போது அடுத்ததாக பெங்களூர் செல்ல திட்டமிட்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.
இவரது விசாக்காலம் நவம்பர் 22 ஆம் திகதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.