தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் - பாலாஜியின் மனைவி நித்யா

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

என்னை பற்றி தவறான அவதூறுகளை நடிகர் தாடி பாலாஜி தொடர்ந்து பரப்பி வந்தால் எனது குழந்தையோடு தற்கொலை செய்துகொள்வேன் என அவரது மனைவி நித்யா தெரிவித்துள்ளார்.

கொமடி நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்த காரணத்தால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

குடித்துவிட்டு வந்து தனது கணவர் தன்னை உடல்ரீதியாவும், மனரீதியாகவும் துன்புறுத்துகிறார் என்றும் இனிமேல் அவருடன் சேர்ந்து வாழமுடியாது என விவாகரத்து கோரினார் நித்யா.

இதற்கிடையில் தனது மனைவிக்கு வேறு நபர்களுடன் தவறான தொடர்பு இருப்பதால் தான் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டை பாலாஜி கூறினார்.

இதனை மறுத்த நித்யா, எனது கணவர் என்னையும் எனது மகளையும் தீவைத்து எரித்து கொலை செய்யப்பார்த்தார் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டார். மேலும் அவர் கூறியதாவது, என்னை பல்வேறு ஆண்களுடன் இணைத்து பேசினால், அதனை கேட்டு மனமுடைந்து அவருடன் சேர்ந்து வாழ்வேன் என்று பாலாஜி நினைக்கிறார்.

குடித்துவிட்டு கணவன் பிரச்சனை செய்வது என்பது எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒன்றுதான், ஆனால் எனது கணவர் சைக்கோ போன்று நடந்துகொள்கிறார், இதனை எங்களால் தாங்கிகொள்ள முடியவில்லை.

அவரின் அரசியல் நண்பர்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். தற்போது எனது மகளையும் என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார். தினம் தினம் என்னை பற்றி சமூகவலைதளங்களில் அவதூறுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

நான் மிகவும் தைரியமான பெண் தான், ஆனால் என்னை பற்றி தவறாக பேசினால் அது எனது குழந்தையின் எதிர்காலத்தையும் பாதிக்கும், இவ்வாறு பாலாஜி தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் நானும் எனது குழந்தையும் தற்கொலை செய்துகொள்வோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்