நிலவேம்பு கசாயம் தொடர்பில் நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு டுவிட்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதுடன் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தமிழகமெங்கும் நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் காய்ச்சல் இல்லாதவர்கள் நிலவேம்பு கசாயத்தை பருகினால் மலட்டுத்தன்மை ஏற்படும் என தகவல்கள் வெளியானது.

இத்தகவலை சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் மறுத்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்