மாடியிலிருந்து குதித்து காதலன் தற்கொலை! காதலி கண்முன் நடந்த விபரீதம்

Report Print Kabilan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

சென்னையில் காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஷாப்பிங் மாலின் மூன்றாவது தளத்திலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தினை சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர் நேற்று சென்னை வடபழனியில் உள்ள மால் ஒன்றிற்கு தனது காதலியுடன் சென்றிருக்கிறார்.

அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் மனமுடைந்த யுவராஜ் மாலின் மூன்றாவது தளத்திலிருந்து குதித்ததில் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து யுவராஜின் காதலிடன் பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாகவும், இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மாலின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய பொலிசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்