ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படை

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய கடலோர காவல்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம் அடைந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அங்கு மீனவர்கள் வலைகளை உலர்த்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த ராணி அபாக்கா கப்பலில் இருந்த கற்படை வீரர்கள், இலங்கை மீனவர்கள் என நினைத்து ரப்பர் குண்டு நிரப்பிய துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை படுகாயம் அடைந்துள்ளார். மேலும் ஒரு படகையும் பிடித்து விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.

இந்திய கடலோர படையினர் நடத்திய இந்த தாக்குதலால் மீனவர்கள் அச்சமடைந்துள்ள நிலையில், இலங்கை மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிக்க வந்ததாக நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்