தமிழகத்தின் தலைவி நயன்தாரா: செய்தி வெளியிட்ட மலையாள பத்திரிகை

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் தமிழக மக்களின் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் அனைவரும் அவரை தமிழகத்தின் தலைவி என்று கொண்டாடுகிறார்கள் என மலையாள பத்திரிகை மனோரமா ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் சமூகப் பிரச்சனைகளைப் பேசும் படமாக வெளிவந்த அறம், தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழர்கள், ஜெயலலிதாவுக்குப் பிறகு அவ்வளவு எளிதில் வேறு யாரையும் 'தலைவி' என்று அழைத்ததில்லை.

'அறம்' திரைப்படத்துக்குப் பிறகு, நயன்தாராவை 'தலைவி' என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தை 'தலைவா' என்று அழைப்பதுபோல நயன்தாராவுக்கு 'தலைவி' என்று பட்டம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர்களே இந்த தென்மாநிலத்தில் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை அலங்கரித்துவருகின்றனர் என செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்