கத்தியால் குத்திய சிறுவர்கள்: மனம் நொந்து போன கமல்ஹாசன்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்து தீவிரவாதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

மேலும், இவருக்கு எதிராக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளன, கமல்ஹாசனின் பேனரை இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தும் வீடியோ வைரலானது.

இதனைப்பார்த்த கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், "என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்" என கமல் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்