தம்பிக்காக கோடிக்கணக்கான சொத்தை தானம் செய்த அக்கா: உருக்கமான நிகழ்வு

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

தமிழகத்தில் தம்பியின் இறுதி ஆசையை அக்கா நிறைவேற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. நெசவுத் தொழிலாளியான இவருக்கு, நடராஜன் என்ற மகனும், ஈஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நடராஜன் நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அவருக்கு தான் நல்லபடியாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் ஆசை, ஆனால் உடல் நிலை ஏற்றுக் கொள்ளதால், நன்றாக படித்த அவரால் வேலைக்கு செல்ல முடியுவில்லை, அவரின் ஆசையும் நிறைவேறவில்லை.

தொடர்ந்து உடல்நிலை மோசமானதால், அவர் இறப்பதற்கு முன் தன் தந்தையிடம், என் சொத்தை அம்மாபாளையம் அரசுப் பள்ளிக்குத் தானமாக வழங்க வேண்டும், அதன் வழியாக ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டும், அது தான் என்னுடைய ஆசை என்று கூறியுள்ளார்.

அதன் பின் தந்தை தனது மகளான ஈஸ்வரியிடம், அம்மாபாளையத்தில் உள்ள நிலத்தை அரசுப்பள்ளிக்கு எழுதிவைத்த உயிலை அவரிடம் கொடுத்திருந்தார், இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும்.

தந்தை இறந்ததையடுத்து ஈஸ்வரி அந்த உயிலை மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வழங்கியிருக்கிறார்.

இதுகுறித்து ஈஸ்வரி கூறுகையில், தம்பி நடராஜன் எம்.பி.ஏ மற்றும் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். படித்து முடித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்தது.

ஆனால், திடீரென்று தம்பியின் உடல் பாதிக்கப்பட்டதால், 10 ஆண்டுகள் படுக்கையில் கிடந்த அவன், 47 வயதில் இறந்தான்.

அப்போது என்னுடைய அப்பா தம்பியின் ஆசை இது தான் என்று எண்ணிடம் கூறி உயிலை கொடுத்தார்.

இதனால் அவனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது, அதன் படி அவனின் ஆசையை தற்போது நிறைவேற்றியுள்ளேன், இனி அந்த நிலம் பள்ளிக்குச் சொந்தம் என கூறியுள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்