பாராட்டு மழையில் பிச்சைக்காரர்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

அரியலூர் மாவட்டத்தில் நாய்களிடமிருந்து குழந்தையை காப்பாற்றிய பிச்சைக்காரருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்குள் குவிந்துள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பின்புறத்தில் வெகுநேரமாக குழந்தையின் அழகுரலை கேட்ட பிச்சைக்காரர், அந்த பக்கம் சென்று பார்த்ததில் குப்பை தொட்டியில் குழந்தை அழுது கொண்டிருந்தது, அதனை பார்த்து நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தது.

உடனடியாக நாய்களை விரட்டி விட்டு, குழந்தையை கையில் எடுத்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் கியாரலாபாத் காவல் நிலையைத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து மருத்துவ உதவியாளர் ராஐகோபால் ஆகியோர் குழந்தையை மீட்டு பாதுகாப்பாக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பச்சிளம் குழந்தையை மீட்டதோடு, பிரச்சைக்காரர் முதியவரை பொதுமக்களும் காவலர்களும் பாராட்டினர்.

இக்குழந்தையைச் சாலையோரம் வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்