தமிழகத்தை உலுக்கிய சிறுமி கொலை வழக்கு: குற்றவாளி மும்பையில் கைது

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை மாங்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினியை அதே அடுக்குமாடியில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றான்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்தின் தந்தை மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும் அவனுக்கு ஜாமீனும் அளித்தது.

வெளியே வந்த தஷ்வந்த் தனது தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் அவனது தாயிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. உனக்கெல்லாம் பணம் தர முடியாது என தஷ்வந்த்தின் தாய் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கொடூரன் தஷ்வந்த், தன்னை பெற்ற தாய் என்றும் பாராமல் இரும்புக் கம்பியால் தனது தாயை அடித்து கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றான்.

இது குறித்து அவனது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தியதில்,மும்பையில் வைத்து அவனை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்