பிரசவ வலியால் துடித்த பெண்: சத்தம் போடாதே என அடித்த செவிலியர்கள்

Report Print Santhan in இந்தியா
319Shares
319Shares
lankasrimarket.com

இந்தியாவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை செவிலியர்கள் சத்தம் போடாதே என்று அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில், பிரவலி காரணமாக துடித்த பெண்ணை, அங்கிருக்கும் செவிலியர்கள் சத்தம் போடாதே என்று அடித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து உன் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது என்று கூறி மருத்துவமனையில் ஓரமாக படுக்க வைத்துள்ளனர்.

ஆனால் தொடர்ந்து பிரசவ வலி ஏற்பட்டதால், வலி தாங்க முடியாமல் அப்பெண் மருத்துவமனையை விட்டு வெளியேறி, அங்கிருக்கும் வறண்ட வயல் வெளிக்கு சென்று வலியால் துடித்துள்ளார்.

பெண்ணனின் அலறல் சத்ததைக் கேட்ட அக்கபக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து பிரசவம் பார்த்துள்ளனர். சிறிது நேரப் போராட்டத்திற்கு பின் அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தது.

செவிலியர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறிய பின், தற்போது குழந்தை உயிருடன் பிறந்திருப்பது மகிழ்ச்சியளித்தாலும், அவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோவை காண...

இந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்