சொந்த மனைவியை அவரின் காதலனுக்கு திருமணம் செய்துவைத்த கணவன்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

மனைவியை அவர் காதலிக்கும் நபருக்கே கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலத்தின் ஹஜிபூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அருண்குமார் என்பவருக்கும் மது குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிய நிலையில் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வேலை விடயமாக அருண்குமார் அடிக்கடி வெளியூர் சென்ற நிலையில் மதுவுக்கு ஸ்ரவான் குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்த ஊர் மக்கள் இது குறித்து அருண்குமாரிடம் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு ஊர் பஞ்சாயத்திடம் சென்ற நிலையில் ஸ்ரவான் குமாருடன் தான் சேர்ந்து வாழ விரும்புவதாக மது கூறியுள்ளார்.

இதையடுத்து மனதை கல்லாக்கி கொண்டு மதுவின் கணவர் அருண்குமார் மனைவியை அவர் காதலனுடன் சேர்த்து வைக்க முடிவெடுத்தார்.

அதன்படி மதுவுக்கும், ஸ்ராவன் குமாருக்கும் கோவிலில் அருண்குமார் திருமணம் நடத்தி வைத்தார்.

மேலும், சட்ட சிக்கல் வரக்கூடாது என திருமணத்தை நீதிமன்றத்திலும் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

தம்பதியை மனதார வாழ்த்தி அனுப்பிய அருண்குமார் தன் இரு குழந்தைகளையும் மதுவிடம் ஒப்படைத்துள்ளார்.மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்