குடி போதையில் தாயை மகன் செய்த செயல்: அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

Report Print Santhan in இந்தியா
310Shares
310Shares
lankasrimarket.com

இந்தியாவில் குடி போதை காரணமாக தாயை அடித்துக் கொன்ற மகனை, பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் சிவானி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெல்லம்மா(65). இவருக்கு 30 வயதில் சுப்பிரமணியம் என்ற மகன் உள்ளார்.

சுப்ரமணியம் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து பொல்லம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, சுப்ரமணியம் மது அருந்தி விட்டு தனது தாய் என்று கூட பாராமல் பொல்லம்மாவை கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

இதை அறிந்த ஊர் பொதுமக்கள் பதுங்கி இருந்து சுப்பிரமணியத்தைப் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசாரிடம் சுப்பிரமணியத்தை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்